ஆஷஸ் தொடர்: கம்மின்ஸ் இல்லையென்றால் யார் கேப்டன் ? ஜார்ஜ் பெய்லி பதில்


ஆஷஸ் தொடர்:  கம்மின்ஸ் இல்லையென்றால் யார் கேப்டன் ?  ஜார்ஜ் பெய்லி பதில்
x

முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் அடுத்த மாதம் 21-ந் தேதி தொடங்குகிறது.

மெல்போர்ன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் அடுத்த மாதம் 21-ந் தேதி தொடங்குகிறது.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. இதனால் அவர் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் முதலாவது ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான் என்று தெரிகிறது. இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி கருத்து கூறியதாவது,

‘கம்மின்ஸ் விளையாட முடியாமல் போனால் சுமித் கேப்டன் பொறுப்பை கவனிப்பார். இது எங்களது வழக்கமான முடிவாகும். இதுவரை இந்த முடிவு எங்களுக்கு சாதகமாகவே அமைந்திருக்கிறது’ என்றார்.

1 More update

Next Story