சர்வதேச கிரிக்கெட்டில் 17 வயதில் கேப்டன் பதவி - குரோஷிய வீரர் புதிய சாதனை

கோப்புப்படம்
கேப்டன் ஜாக் உகுசிச் 43 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஜாக்ரெப்,
குரோஷியா- சைப்ரஸ் அணிகள் இடையிலான முதலாவது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி குரோஷியா தலைநகர் ஜாக்ரெப்பில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் குரோஷியா அணியின் 17 வயதான ஜாக் உகுசிச் கேப்டனாக அறிமுகமானார்.
இதன் மூலம் இளம் வயதில் சர்வதேச அணியை வழிநடத்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். முன்னதாக 2022-ம் ஆண்டு நோமன் அம்ஜத் தனது 18 வயதில் பிரான்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டதே சாதனையாக இருந்தது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சைப்ரஸ் அணி 3 விக்கெட்டுக்கு 213 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய குரோஷிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 155 ரன்களே எடுத்து தோற்றது. கேப்டன் ஜாக் உகுசிச் 43 ரன்னில் ஆட்டமிழந்தார்.
Related Tags :
Next Story






