முதல் டி20: இந்தியாவின் பிளேயிங் லெவனை கணித்த முன்னாள் வீரர்... யாருக்கெல்லாம் இடம்..?

image courtesy:PTI
இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
மும்பை,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்காவும் (2-0), அதன்பின் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்தியாவும் (2-1) கைப்பற்றின.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி கட்டாக்கில் நாளை நடைபெற உள்ளது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த முதல் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரரான இர்பான் பதான் கணித்துள்ளார். தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா - சுப்மன் கில்லை அவர் தேர்வு செய்துள்ளார். ஆனால் அவரது அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ஷிவம் துபேவை அவர் தேர்வு செய்யவில்லை. விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மாவை அவர் தேர்வு செய்துள்ளார்.
இர்பான் பதான் தேர்வு செய்த இந்திய அணியின் பிளேயிங் லெவன்:
அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, அக்சர் படேல், ஹர்திக் பாண்ட்யா, ஜிதேஷ் சர்மா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.






