இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்.. சச்சின் இரங்கல்


இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்.. சச்சின் இரங்கல்
x
தினத்தந்தி 24 Jun 2025 5:37 PM IST (Updated: 24 Jun 2025 7:51 PM IST)
t-max-icont-min-icon

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான திலீப் தோஷி இன்று காலமானார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான திலீப் தோஷி (வயது 77) இன்று காலமானார். இடதுகை சுழற்பந்து வீச்சாளரான இவர், 1979-83 காலத்தில் இந்திய அணிக்காக 33 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அவரது மறைவுக்கு பல முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்களும், பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியிலும் இரு அணி வீரர்களும் அவருக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், "1990-ம் ஆண்டு இங்கிலாந்தில் நான் திலீப்பாயை முதன்முதலில் சந்தித்தேன். அந்த சுற்றுப்பயணத்தில் அவர் வலை பயிற்சியில் எனக்கு பந்து வீசினார். அவர் என்னை மிகவும் நேசித்தார். நான் அவரது உணர்வுகளுக்கு பதிலளித்தேன். திலீப்பாயைப் போன்ற ஒரு அன்பான ஆன்மாவை நான் மிகவும் இழக்கிறேன். நாங்கள் நடத்திய அந்த கிரிக்கெட் உரையாடல்களை நான் இழப்பேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

ஓம் சாந்தி. " என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story