29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு... முடிவை மாற்றி களத்திற்கு திரும்பும் தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன்

image courtesy:ICC
இவர் கடந்த 2023-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
கேப்டவுன்,
தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான டேன் வான் நீகெர்க் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளார். எதிர்வரும் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் முடிவில் அவர் களத்திற்கு மீண்டும் திரும்பி உள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான டேன் வான் நீகெர்க் கடந்த 2023-ம் ஆண்டு தனது 29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். அந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெறாததால் ஓய்வு முடிவை எடுத்தார்.
தென் ஆப்பிரிக்கா அணிக்காக 107 ஒருநாள், 86 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 50 ஒருநாள் மற்றும் 30 டி20 போட்டிகளில் அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக கருதப்பட்ட அவர் அடிக்கடி காயத்தை சந்தித்ததால் தனது கெரியரில் பின்னடைவை சந்தித்தார்.
அந்த சூழலில் எதிர்வரும் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என தனது ஓய்வு முடிவை மாற்றியுள்ளார். அத்துடன் அவரது முடிவை ஏற்றுக்கொண்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு தயாராகி வரும் 20 பேர் கொண்ட அணியில் அவரை சேர்த்துள்ளது.






