ஐ.சி.சி. தரவரிசை: முதலிடத்தில் நீடிக்கும் வருண் சக்கரவர்த்தி

திலக் வர்மா 3-வது இடத்திலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 8-வது இடத்திலும் உள்ளனர்.
ஐ.சி.சி. தரவரிசை: முதலிடத்தில் நீடிக்கும் வருண் சக்கரவர்த்தி
Published on

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டி20 போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்டர்களின் தரவரிசையில் இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா 925 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். திலக் வர்மா 3-வது இடத்திலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 8-வது இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சாளர் தரவரிசையில் சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி நம்பர் 1 ஆக வலம் வருகிறார். வெஸ்ட் இண்டீசின் அகில் ஹூசைன் 2-வது இடமும், ஆப்கானிஸ்தானின் ரஷித்கான் 3-வது இடமும் வகிக்கிறார்கள். இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 இடங்கள் சரிந்து 15-வது இடத்தை பெற்றுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com