மகளிர் உலகக்கோப்பையுடன் புகைப்படம் எடுத்த இந்தியா - தென் ஆப்பிரிக்கா கேப்டன்கள்.. வைரல்


மகளிர் உலகக்கோப்பையுடன் புகைப்படம் எடுத்த இந்தியா - தென் ஆப்பிரிக்கா கேப்டன்கள்.. வைரல்
x

நடப்பு மகளிர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.

மும்பை,

இந்தியாவில் நடைபெற்று வரும் 13-வது மகளிர் உலகக்கோப்பை தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதன் அரையிறுதி ஆட்டங்களின் முடிவில் இதுவரை உலகக்கோப்பையை வெல்லாத இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறின.

இந்த சூழலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நவிமும்பை மைதானத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில், தங்களது முதலாவது உலகக்கோப்பைக்காக இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இந்நிலையில் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ள சூழலில் இந்த தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கும் சாம்பியன் கோப்பையுடன் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வால்வார்ட் ஆகியோர் புகைப்படம் எடுத்து கொண்டனர். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story