இந்தியா-ஆஸி. ஒருநாள் தொடர்: வெற்றி கோப்பையுடன் புகைப்படம் எடுத்த கேப்டன்கள்

image courtesy:BCCI
இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டியில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நாளை நடக்கிறது.
இந்த தொடரில் இந்திய அணி புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் களமிறங்க உள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி கடந்த வியாழக்கிழமை ஆஸ்திரேலியா சென்றடைந்தது. பெர்த்தில் இந்திய அணியினர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பையுடன் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லும், ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷும் புகைப்படம் எடுத்து கொண்டனர். இது வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story






