பெர்த்தில் விளையாடும் மழை : இந்தியா - ஆஸ்திரேலியா ஆட்டம் பாதிப்பு

ஷ்ரேயாஸ் அய்யர் 11 ரன்களில் ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பெர்த்,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டியில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சேல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக கில், ரோகித் சர்மா களமிறங்கினர். தொடக்கத்தில் ரோகித் சர்மா 8 ரன்களில் ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் கில் 10 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இதனால் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது . தற்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது . மழை நின்ற பின் போட்டி மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்திய அணி 11.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு37 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் சுமார் 2 மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மழை நின்றதால் ஆட்டம் 35 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தற்போது ஆட்டம் மீண்டும் தொடங்கி நடைபெற்றது. ஷ்ரேயாஸ் அய்யர் 11 ரன்களில் ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் கேஎல் ராகுல் களமிறங்கினார். இந்திய அணியில் அக்சர் படேல், கேஎல் ராகுல் ஆகியோர் விளையாடினர். இந்திய அணி 14.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மழை நின்றதால் மீண்டும் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது . 32 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.






