மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்த இந்தியா - பாக். ஆட்டம்


மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்த இந்தியா - பாக். ஆட்டம்
x

மகளிர் உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

துபாய்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் 11 ஆட்டங்களை டி.வி. மற்றும் இணையதள செயலி வழியாக 7 கோடியே 20 லட்சம் பேர் பார்த்து இருப்பதாகவும், இது முந்தைய உலகக் கோப்பையுடன் ஒப்பிடும்போது 166 சதவீதம் அதிகம் எனவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தெரிவித்துள்ளது.

குறிப்பாக பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் மோதலை மட்டும் சாதனை எண்ணிக்கையாக 2 கோடியே 84 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர். இதன் மூலம் மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக பார்வையாளர்களை ஈர்த்த ஆட்டமாக இது சாதனை படைத்துள்ளது.

1 More update

Next Story