நாடு திரும்பிய இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கம்பீர்


நாடு திரும்பிய இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கம்பீர்
x

இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் ஓய்வு பெற்றுள்ளதால் இந்த தொடருக்கான இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் சாய் சுதர்சன், கருண் நாயர், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்ட ஜூனியர் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். சீனியர் வீரர்களான விராட், ரோகித், அஸ்வின் இல்லாமல் களம் காணும் இந்திய அணி இந்த தொடரை வெல்ல கடுமையாக போராடும். இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கம்பீர் அவசரமாக நாடு திரும்பியுள்ளார். குடும்ப காரணத்திற்காக அவர் நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் அவர் மீண்டும் அணியில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story