ஐ.பி.எல். 2025: புதிய ஜெர்சியை வெளியிட்ட பஞ்சாப் கிங்ஸ்

Image Courtesy: @PunjabKingsIPL
பஞ்சாப் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி,
10 அணிகள் கலந்து கொள்ள உள்ள 18-வது ஐ.பி.எல். தொடர் வரும் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் ஒரு பிரிவிலும், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் மற்றொரு பிரிவிலும் அங்கம் வகிக்கின்றன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும், எதிர்பிரிவில் 4 அணிகளுடன் தலா ஒரு முறையும், ஒரு அணியுடன் மட்டும் 2 முறையும் மோத வேண்டும். இவ்வாறு ஒரு அணி மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது இருந்தே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், நடப்பு தொடருக்கான புதிய ஜெர்சியை பஞ்சாப் கிங்ஸ் அணி அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.