ஐ.பி.எல்.: குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சு தேர்வு

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறுகின்ற முதல் ஆட்டத்தில் லக்னோ - குஜராத் அணிகள் விளையாடுகின்றன.
லக்னோ,
18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
அதன்படி மாலை 3.30 மணிக்கு லக்னோவில் அரங்கேறும் 26-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி குஜராத் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஹிம்மத் சிங், டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாகூர், ஆகாஷ் தீப், திக்வேஷ் சிங் ரதி, அவேஷ் கான், ரவி பிஷ்னோய்
குஜராத் டைட்டன்ஸ்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், ஷெர்பேன் ரூதர்போர்ட், ஷாருக் கான், ராகுல் திவேட்டியா, அர்ஷத் கான், ரஷித் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ்






