விஜய் சங்கரை ரூ. 1.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

விஜய் சங்கரை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 1.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
துபாய்,
10 அணிகள் பங்கேற்கும் 18வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் அடுத்த ஆண்டு மார்ச் 14ம் தேதி தொடங்கி மே 25 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி வீரர்கள் தக்கவைப்பு, வீரர்கள் விடுவிப்பு உள்ளிட்டவை நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
இந்த ஏலப்பட்டியலில் மொத்தம் 577 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. ஏல நிகழ்ச்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யபடுகிறது. ஜியோ சினிமா செயலியிலும் ஏல நிகழ்ச்சியை காணலாம்.
Live Updates
- 24 Nov 2024 4:41 PM IST
ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகையாக ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்டை ஏலத்தில் எடுத்தது லக்னோ அணி.ரூ .20.75 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இறுதியாக ஏலம் எடுத்த நிலையில், ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தியது டெல்லி அணி. ரூ.27 கோடியாக ஏலத் தொகையை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உயர்த்திய நிலையில், அந்த தொகைக்கு டெல்லியால் ஈடு கொடுக்க முடியாததால் பண்ட்-ஐ லக்னோஅணியே ஏலத்தில் எடுத்தது .
- 24 Nov 2024 4:40 PM IST
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை ரூ . 11.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி.கடந்த சீசனில் ரூ .24.75 கோடி என்ற உச்சபட்ச விலைக்கு கொல்கத்தா அணி இவரை ஏலத்தில் எடுத்திருந்தது.
- 24 Nov 2024 4:26 PM IST
இங்கிலாந்து வீரர் ஜோஷ் பட்லரை ரூ .15.75 கோடிக்கு குஜராத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது
- 24 Nov 2024 4:17 PM IST
ஷ்ரேயாஸ் அய்யரை ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகையாக ரூ .26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
Missed watching that stunning Shreyas bidding process❓
— IndianPremierLeague (@IPL) November 24, 2024
We have you covered here with the snippets 🎥 🔽#TATAIPLAuction | #TATAIPL | @ShreyasIyer15 | @PunjabKingsIPL | #PBKS pic.twitter.com/a7jAki8LVz - 24 Nov 2024 4:03 PM IST
தென் ஆப்பிரிக்க வீரர் ரபடாவை ரூ .10.75 கோடிக்கு குஜராத் அணி ஏலத்தில் வாங்கி உள்ளது
- 24 Nov 2024 4:00 PM IST
ஆர்.டி.எம். கார்டு மூலம் பஞ்சாப் அணி அர்ஷிதீப் சிங்கை ரூ .18 கோடிக்கு மீண்டும் ஏலத்தில் வாங்கி உள்ளது






