இத்தாலி ஓபன் டென்னிஸ்: அலெக்ஸ் டி மினார் அதிர்ச்சி தோல்வி


இத்தாலி ஓபன் டென்னிஸ்: அலெக்ஸ் டி மினார் அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 14 May 2025 4:32 PM IST (Updated: 14 May 2025 6:55 PM IST)
t-max-icont-min-icon

அலெக்ஸ் டி மினார் , அமெரிக்க வீரர் டாமி பவுல் ஆகியோர் மோதினர்.

ரோம்,

பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினார் - அமெரிக்க வீரர் டாமி பவுல் ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய டாமி பவுல் 7-5,6-3 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

1 More update

Next Story