ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமனம்

இளம் அதிரடி புயல் வைபவ் சூர்யவன்ஷி இடத்தை தக்க வைத்துள்ளார்.
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமனம்
Published on

புதுடெல்லி,

ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோருக்கான) ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது. 8 அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டியில் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் தகுதி சுற்று போட்டி மூலம் வரும் அணியை (டிச.12) சந்திக்கிறது. 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானையும் (டிச.14), 3-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் தகுதி சுற்று அணியையும் (டிச.16) எதிர்கொள்கிறது.

ஜூனியர் ஆசிய கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக மராட்டியத்தை சேர்ந்த ஆயுஷ் மாத்ரே தொடருகிறார். விஹான் மல்கோத்ரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இளம் அதிரடி புயல் வைபவ் சூர்யவன்ஷி இடத்தை தக்க வைத்துள்ளார்.

இந்திய அணி வருமாறு:-

ஆயுஷ் மாத்ரே (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மல்கோத்ரா, வேதாந்த் திரிவேதி, அபியான் குண்டு, ஹர்வன்ஷ் சிங், யுவராஜ் கோஹில், கனிஷ்க் சவுகான், ஹிலான் பட்டேல், நமன் புஷ்பாக், தீபேஷ், ஹெனில் பட்டேல், கிஷன் குமார் சிங், உதவ் மோகன், ஆரோன் ஜார்ஜ்.

மாற்று வீரர்களாக ராகுல் குமார், ஹேம்சுதேஷன், கிஷோர், ஆதித்யா ராவத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com