ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு


ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
x

image courtesy:ICC

தென் ஆப்பிரிக்க அணி ‘டி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது.

கேப்டவுன்,

16-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி முதல் பிப்ரவரி 6-ந்தேதி வரை ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் தென் ஆப்பிரிக்க அணி ‘டி’ பிரிவில் தான்சானியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முகமது புல்புலியா தலைமையிலான அணியில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அணி விவரம்: முகமது புல்புலியா (கேப்டன்), ஜேஜே பாஸன், டேனியல் போஸ்மேன், கார்னே போத்தா, பால் ஜேம்ஸ், ஏனாதி கிட்ஷினி தெம்பலேத்து, மைக்கேல் க்ரூஸ்காம்ப், அட்னான் லகாடியன், பயண்டா மஜோலா, அர்மான் மனாக், பந்தில் எம்பாதா, லெதாபோ பஹ்லமோலாகா, ஜேசன் ரோல்ஸ், சோனி, ஜோரிச் வான்.

1 More update

Next Story