முதல் இந்திய வீரர்...இன்னும் 26 ரன்கள் - ஷ்ரேயாஸ் ஐயர் நிகழ்த்த இருக்கும் சாதனை

ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 2,974 ரன்களை குவித்துள்ளார்.
சென்னை,
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. முதல் 2 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளநிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
அதனை தொடர்ந்து இந்த ஒருநாள் தொடரின் முடிவை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது எதிர்வரும் நாளை இந்தூரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த இறுதிப்போட்டியில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கும் துணை கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் போட்டிகளில் ஒரு முக்கியமான சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அவர் 26 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் ஒருநாள் போட்டிகளில் 3,000 ரன்களை பூர்த்தி செய்வார். இதன் மூலம் அதிவேகமாக 3,000 ரன்களை பூர்த்தி செய்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்துவார்.
ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்காக கடந்த 2017 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 69 இன்னிங்ஸ்களில் 5 சதம் மற்றும் 23 அரைசதம் என 2974 ரன்களை குவித்துள்ளார்.
1.ஷிகர் தவான்: 72 இன்னிங்ஸ்கள்
2. விராட் கோலி: 75 இன்னிங்ஸ்கள்
3. கே.எல். ராகுல்: 78 இன்னிங்ஸ்கள்






