ஆஷஸ் கடைசி டெஸ்ட்: பெத்தேல் அபார சதம்...2வது இன்னிங்சில் இங்கிலாந்து முன்னிலை


ஆஷஸ் கடைசி டெஸ்ட்: பெத்தேல் அபார சதம்...2வது இன்னிங்சில் இங்கிலாந்து முன்னிலை
x
தினத்தந்தி 7 Jan 2026 2:04 PM IST (Updated: 7 Jan 2026 2:42 PM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தேல் சிறப்பாக விளையாடினார்.

சிட்னி,

ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் கிராலி (16), பென் டக்கெட் (27), ஜேக்கப் பெத்தேல் (10) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் இங்கிலாந்து 57 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. இருவரும் அரைசதம் கடந்தனர்.

ஹாரி ப்ரூக் 84 ரன்னில் அவுட்டாக, நிலைத்து நின்று ஆடிய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். 97.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி 384 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 160 ரன்கள் அடித்து அவுட்டானார்.

இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய வந்தது. ஆஸ்திரேலிய அணியில் ஹெட் தொடர்ந்து பொறுப்புடன் ஆடி ரன்கள் குவித்தார். அவருடன் ஸ்மித் இணைந்து நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை இருவரும் நாலாபுறமும் சிதறடித்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் சதமடித்து அசத்தினர்.

ஹெட் 163 ரன்களும், ஸ்மித் 138 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 3வது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் குவித்தது.

இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 567 ரன்களுக்கு ஆட்டமிழ்ந்தது. பின்னர் 183 ரன்கள் இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தேல் சிறப்பாக விளையாடினார்.

தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய அவர் சதமடித்து அசத்தினார். மற்ற வீரர்களில் டக்கெட் , ஹாரி புரூக் தலா 42 ரன்கள் எடுத்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 4வது நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்தது.119 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது

ஜேக்கப் பெத்தேல் 142 ரன்கள், மாத்யூ பட்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர் .

1 More update

Next Story