லெஜண்ட்ஸ் லீக்; இங்கிலாந்துக்கு எதிராக தோல்வி கண்ட இந்தியா


லெஜண்ட்ஸ் லீக்; இங்கிலாந்துக்கு எதிராக தோல்வி கண்ட இந்தியா
x

Image Courtesy: @WclLeague

இங்கிலாந்து தரப்பில் அஜ்மல் ஷாஜாத் 4 விக்கெட் வீழ்த்தினார்.

லீட்ஸ்,

2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீட்சில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இந்தியா சாம்பியன்ஸ் - இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 223 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ரவி போபரா சதம் (110 ரன் *) அடித்து அசத்தினார். இந்தியா தரப்பில் ஹர்பஜன் சிங் 2 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 224 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 200 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 23 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக யூசுப் பதான் 52 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் அஜ்மல் ஷாஜாத் 4 விக்கெட் வீழ்த்தினார்.

1 More update

Next Story