இந்தியா - தென் ஆப்பிரிக்கா டெஸ்டில் மதிய உணவு நேரம் மாற்றம்

காலை 9 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
கவுகாத்தி,
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள கவுகாத்தியில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. அங்கு சூரியன் சீக்கிரமாக உதயமாவதுடன், முன்னதாகவே மறைந்து விடும். அதாவது மாலை 4 மணிக்கே வெளிச்சம் மங்கி விடும். இதற்கு ஏற்ப இந்த டெஸ்ட் போட்டியில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி அரைமணி நேரத்திற்கு முன்பாக காலை 9 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பகல் 11.30 மணிக்கு மதிய உணவு இடைவேளை விடப்படும். அந்த நடைமுறை இந்த டெஸ்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன்படி முதலில் தேனீர் இடைவேளை பகல் 11 மணிக்கும் (20 நிமிடங்கள்), மதிய உணவு இடைவேளை பிற்பகல் 1.20 மணி முதல் 2 மணி வரையும் விடப்படுகிறது.
Related Tags :
Next Story






