ஐ.பி.எல். வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த மிட்செல் மார்ஷ்

image courtesy:twitter/@ICC
மும்பைக்கு எதிரான இன்றைய போட்டியில் மிட்செல் மார்ஷ் 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.
லக்னோ,
ஐ.பி.எல். தொடரில் இன்று லக்னோவில் நடைபெற்று வரும் 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்க்ரம் - மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இதில் பவர்பிளேயான முதல் 6 ஓவர்களில் மட்டும் 30 பந்துகளை எதிர்கொண்ட மிட்செல் மார்ஷ் 60 ரன்கள் அடித்த நிலையில் பவர்பிளே முடிந்த அடுத்த ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் பவர்பிளே ஓவர்களில் அதிக பந்துகளை சந்தித்த பேட்ஸ்மேன் என்ற மாபெரும் சாதனையை மிட்செல் மார்ஷ் படைத்துள்ளார்.
தற்போது வரை லக்னோ அணி 11 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் அடித்துள்ளது.






