சூப்பர் ஹீரோக்களாக மாறிய மும்பை வீரர்கள்.. காரணம் என்ன..?


சூப்பர் ஹீரோக்களாக மாறிய மும்பை வீரர்கள்.. காரணம் என்ன..?
x

image courtesy:twitter/@mipaltan

தினத்தந்தி 22 April 2025 4:02 PM IST (Updated: 22 April 2025 4:04 PM IST)
t-max-icont-min-icon

மும்பை அணி தற்போது புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

மும்பை,

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் தனது 9-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் 23-ம் தேதி மோத உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்க ஐதராபாத் வந்தடைந்த மும்பை இந்தியன்ஸ் அணியில் சில வீரர்கள் சூப்பர் ஹீரோக்கள் போல உடையணிந்து விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இதற்கான காரணம் என்னவெனில், அணியின் ஆலோசனை கூட்டங்கள் மற்றும் பயிற்சிகளுக்கு தாமதமாக வரும் வீரர்களுக்கு மும்பை அணி நிர்வாகம் இந்த நூதன தண்டனை வழங்குகிறது. அதன்படி திலக் வர்மா, வில் ஜாக்ஸ் உள்ளிட்ட வீரர்கள் சூப்பர் ஹீரோக்கள் உடையணிந்து வந்தனர்.

கடந்த சீசனிலும் மும்பை நிர்வாகம் இதனை கடைபிடித்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story