டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்: மெக்ராத்தை முந்திய நாதன் லயன்


டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்: மெக்ராத்தை முந்திய நாதன் லயன்
x

திக விக்கெட் வீழ்த்திய 2-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

அடிலெய்டு,

ஆஸ்திரேலிய அணியின் 38 வயது சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் நேற்று ஆலி போப், பென் டக்கெட் ஆகியோரின் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தினார் . இதனால் அவரது விக்கெட் எண்ணிக்கை 564 ஆக (141 டெஸ்ட்) உயர்ந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத்தை (563 விக்கெட்) பின்னுக்கு தள்ளி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றியவர்களின் பட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னேறினார். அத்துடன் அதிக விக்கெட் வீழ்த்திய 2-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய முதல் 5 இடங்களில் இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் (800 விக்கெட்), ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே (708), இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் (704), இந்தியாவின் அனில் கும்பிளே (619) இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் (604) ஆகியோர் உள்ளனர்.

1 More update

Next Story