ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு - விசாரணைக்கு ஆஜராகுமாறு சுரேஷ் ரெய்னாவுக்கு சம்மன்

கோப்புப்படம்
ஆன்லைன் சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய வழக்கில் இன்றுவிசாரணைக்கு ஆஜராகுமாறு சுரேஷ் ரெய்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கு அமலாக்கதுறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது. சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்துவதன் மூலம் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதா மற்றும் அது பணமோசடியுடன் தொடர்புடையதா என கோணத்தில் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் இன்று ஆஜராகுமாறு இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இன்று நடைபெறும் விசாரணையில் ரெய்னாவிடம் வாக்குமூலம் பெற அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.
Related Tags :
Next Story






