5 சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்த ரவி சாஸ்திரி.. நம்பர் 1 தேர்வு யார் தெரியுமா..?


5 சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்த ரவி சாஸ்திரி.. நம்பர் 1 தேர்வு யார் தெரியுமா..?
x

இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ரவி சாஸ்திரியிடம் இது கேட்கப்பட்டது.

மும்பை,

கிரிக்கெட் வரலாற்றில் பல வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர். பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என 3 துறைகளிலும் பல வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வரலாற்றில் நீங்காத இடம் பிடித்துள்ளனர். உதாரணமாக பீல்டிங் என்றால் நமக்கு நிபாகம் வருவது ஜாண்டி ரோட்ஸ். அதேபோல பல்வேறு வீரர்கள் பல துறைகளில் சிறந்து விளங்கியுள்ளனர்.

இதனையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட வீரர்களிடம் கிரிக்கெட் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.

அந்தவகையில் இங்கிலாந்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரவி சாஸ்திரியிடம் 5 சிறந்த இந்திய வீரர்களை தேர்வு செய்யும்படி கேட்கப்பட்டது. அதற்கு ரவி சாஸ்திரி, 'சுனில் கவாஸ்கர், கபில் தேவ், சச்சின், மகேந்திரசிங் தோனி மற்றும் விராட் கோலி' ஆகியோரை தேர்வு செய்தார். இவர்களில் தன்னுடைய நம்பர் 1 தேர்வு சச்சின் தெண்டுல்கர் எனவும் கூறினார்.


1 More update

Next Story