ரிங்கு சிங் - பிரியா சரோஜ் எம்.பி. திருமணம் ஒத்திவைப்பு.. வெளியான தகவல்


ரிங்கு சிங் - பிரியா சரோஜ் எம்.பி. திருமணம் ஒத்திவைப்பு.. வெளியான தகவல்
x

image courtesy:instagram/rinkukumar12

ரிங்கு சிங் - பிரியா சரோஜ் எம்.பி. திருமணம் நவம்பர் 19-ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

லக்னோ,

இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்.பி. பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது நிச்சயம் கடந்த 8-ம் தேதி லக்னோவில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில் நடைபெற்றது. இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர்.

இதில் பல உறவினர்கள், நண்பர்கள், அரசியல்வாதிகள், கிரிக்கெட் வீரர்கள் என 300 பேர் கலந்து கொண்டு வாழ்த்தினர். இவர்களது திருமணத்தை வருகிற நவம்பர் 19-ம் தேதி வாரணாசியில் உள்ள தாஜ் ஓட்டலில் நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்தனர்.

இந்நிலையில் இவர்களது திருமணம் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இவர்களது திருமணம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story