’போதும் வாங்க’...பிக்பேஷ் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த ரிஸ்வான்

ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் 2025/26 டி20 கிரிக்கெட் நடைபெற்று வருகின்றது.
சென்னை,
இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். போன்று ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் 2025/26 டி20 கிரிக்கெட் நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று நடைபெற்ற 33வது போட்டியில் மெல்போர்ன் – சிட்னி அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி தண்டர்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் அணிக்கு 62 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ஜோஸ் பிரவுன் 35 (25) ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ஜேக் பிரேஷர் 19 (9) ரன்களில் அவுட்டானார். அப்போது களமிறங்கிய பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மறுபுறம் மற்றொரு துவக்க வீரர் டிம் சைபர்ட் 29 (25) ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த காலேப் ஜூவல் 4 ரன்னில் அவுட்டான நிலையில் முகமது ரிஸ்வான் தொடர்ந்து நிதானமாகவே விளையாடினார். நன்கு செட்டிலான முகமது ரிஸ்வான் அதிரடி காட்டத் தடுமாறினார். குறிப்பாக 18 ஓவரில் மெல்போர்ன் 154/4 என்ற நிலையில் தடுமாறிய போதும் ரிஸ்வான் அதிரடியாக விளையாட முயற்சி செய்யவில்லை. அதனால் பொறுமையிழந்த மெல்போன் அணியன் கேப்டன் வில் சதர்லேண்ட் ரிஸ்வானை வெளியே வர அழைத்ததுடன் தாமே பேட்டிங் செய்ய களத்திற்கு சென்றார்.
அதனால் 23 பந்தில் 26 ரன்களை 113.04 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்த ரிஸ்வான் ரிட்டையர்டு அவுட்டாகி களத்திலிருந்து வெளியேறினார். இதன் மூலம் பிக்பேஷ் வரலாற்றில் நிக் மேடின்சனுக்கு பின் ரிட்டையர்ட் அவுட்டான 2வது வீரர் என்ற மோசமான சாதனையை ரிஸ்வான் படைத்துள்ளார்.






