ரிஸ்வான் நீக்கம்... பாகிஸ்தான் அணிக்கு புதிய ஒருநாள் கேப்டன் நியமனம்


ரிஸ்வான் நீக்கம்... பாகிஸ்தான் அணிக்கு புதிய ஒருநாள் கேப்டன் நியமனம்
x

image courtesy:ICC

தினத்தந்தி 21 Oct 2025 5:30 AM IST (Updated: 21 Oct 2025 5:31 AM IST)
t-max-icont-min-icon

ஒருநாள் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரிஸ்வான் நீக்கப்பட்டுள்ளார்.

லாகூர்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒருநாள் (50 ஓவர்) போட்டிகளுக்கான புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடி நியமிக்கபட்டுள்ளார். முகமது ரிஸ்வானிடமிருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ஷாகீன் அப்ரிடிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ரிஸ்வானை மாற்றி அப்ரிடியை கேப்டனாக நியமிக்கும் முடிவு, பாகிஸ்தான் அணியின் வெள்ளை பந்து (ஒருநாள் மற்றும் டி20) தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன், உயர் செயல்திறன் இயக்குனர் அகிப் ஜாவேத் மற்றும் இஸ்லாமாபாத்தில் நடந்த தேசிய தேர்வுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

ஷாகீன் அப்ரிடியின் பதவிக்காலம் நவம்பர் மாதம் நடைபெற உள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஆரம்பமாக உள்ளது. இவர் ஏற்கனவே பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story