3-வது பந்தில் சிக்ஸ்.. 4-வது பந்தில் அவுட்.. களத்தில் ஹெட் - சிராஜ் வாக்குவாதம்


3-வது பந்தில் சிக்ஸ்.. 4-வது பந்தில் அவுட்.. களத்தில் ஹெட் - சிராஜ் வாக்குவாதம்
x
தினத்தந்தி 7 Dec 2024 3:57 PM IST (Updated: 7 Dec 2024 4:04 PM IST)
t-max-icont-min-icon

அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் சிராஜ் - ஹெட் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அடிலெய்டு,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 180 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி டிராவிஸ் ஹெட்டின் சதம் (140 ரன்கள்) மற்றும் லபுஸ்சேனின் அரைசதத்தின் (64 ரன்கள்) உதவியுடன் 337 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பின்னர் 157 ரன்கள் பின்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.

முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்சின்போது இந்திய வேகப்பந்து வீசிய 82-வது ஓவரின் 3-வது பந்தை டிராவிஸ் ஹெட் சிக்சருக்கு பறக்க விட்டார். அதற்கு அடுத்த 4-வது பந்திலேயே சிராஜ் அவரை கிளீன் போல்டாக்கி பதிலடி கொடுத்தார். மேலும் டிராவிஸ் ஹெட்டை நோக்கி ஆக்ரோஷமாக கத்தியதுடன் 'போ' என்ற வகையில் சைகையும் காண்பித்தார். இதனால் இருவருக்குமிடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.

1 More update

Next Story