சூர்யகுமார், ரிக்கல்டன் அரைசதம்... லக்னோ அணிக்கு 216 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை


சூர்யகுமார், ரிக்கல்டன் அரைசதம்... லக்னோ அணிக்கு 216 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை
x
தினத்தந்தி 27 April 2025 5:30 PM IST (Updated: 27 April 2025 5:32 PM IST)
t-max-icont-min-icon

மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்தது.

மும்பை,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் மாலை 3.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்கிய 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

5 முறை சாம்பியனான மும்பை அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. அதேபோல் லக்னோ அணியும் 9 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரியான் ரிக்கல்டன் -ரோகித் சர்மா களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா(12 ரன்கள்) 3-வது ஓவரில் அவுட் ஆகி வெளியேற, அடுத்து வந்த வில் ஜாக்ஸ் உடன் ரியான் ரிக்கல்டன் ஜோடி சேர்ந்தார்.

ரியான் ரிக்கல்டன்(6 பவுண்டரி, 4 சிக்ஸர்) அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். 32 பந்துகளில் 58 ரன்கள் குவித்த அவர், 9-வது ஓவரில் திக்விஜேஷ் ரத்தி வீசிய பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். நிதானமாக ஆடிய வில் ஜாக்ஸ், 29 ரன்கள் எடுத்த நிலையில், பிரின்ஸ் யாதவ் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.

அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த சூர்யகுமார் யாதவ்(4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்) 28 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். திலக் வர்மா 6 ரன்களிலும், ஹர்திக் பாண்ட்யா 5 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். இறுதி ஓவர்களில் அதிரடி காட்டிய நமன் திர்(25 ரன்கள்) மற்றும் கார்பின் போஷ்(20 ரன்கள்) அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதையடுத்து மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக மயங்க் யாதவ் மற்றும் ஆவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி லக்னோ அணி விளையாடி வருகிறது.

1 More update

Next Story