டி20 பிளாஸ்ட் தொடர்: சாம்பியன் பட்டம் வென்ற சாமர்செட் அணி


டி20 பிளாஸ்ட் தொடர்: சாம்பியன் பட்டம் வென்ற சாமர்செட் அணி
x

கோப்புப்படம்

இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகன் விருது வில் ஸ்மீடுக்கு வழங்கப்பட்டது.

லண்டன்,

இங்கிலாந்தில் நடத்தப்படும் டி20 லீக் தொடரில் டி20 பிளாஸ்ட் தொடரும் ஒன்று. இந்நிலையில், டி20 பிளாஸ்ட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சாமர்செட் மற்றும் ஹாம்ப்ஷையர் அணிகள் மோதின. டாஸ் வென்ற சாமர்செட் அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஹாம்ப்ஷையர் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 194 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டகாரர் டோபி ஆல்பர்ட் அரை சதமடித்து 85 ரன்கள் எடுத்தார். கேப்டன் வின்ஸ் 52 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சாமர்செட் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் வில் ஸ்மீட் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 94 ரன் குவித்தார். இறுதியில், 19 ஓவரில் சாமர்செட் அணி 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்து வென்றதுடன், கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகன் விருது வில் ஸ்மீடுக்கு வழங்கப்பட்டது.

1 More update

Next Story