டி20 கிரிக்கெட்: வித்தியாசமான சாதனையில் 2-வது இடம் பிடித்த இந்திய அணி

image courtesy:BCCI
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
ஹோபர்ட்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 3-வது ஆட்டம் ஹோபர்ட்டில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிம் டேவிட் 74 ரன்களும், ஸ்டோய்னிஸ் 64 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 187 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 49 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த ஆட்டத்தில் 187 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்கவில்லை. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்காமல் அதிக ரன்களை சேசிங் செய்த அணி என்ற வித்தியாசமான சாதனையில் இந்திய அணி 2-வது இடத்தை பிடித்துள்ளது.
அந்த பட்டியல்:
1. இங்கிலாந்து - 197 ரன்கள்
2. இந்தியா - 187 ரன்கள்
3. ஆஸ்திரேலியா - 179 ரன்கள்






