டி20 உலக கோப்பை - ’அதிக ரன்கள் குவிக்கப்போகும் இந்திய வீரர் இவர்தான்’- சுரேஷ் ரெய்னா

இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
சென்னை,
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது பிப்ரவரி 7-ம் தேதி துவங்கி மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்த தொடரில் அதிக ரன்களை குவிக்கப்போகும் வீரர் யார்? அதிக விக்கெட் எடுக்கப்போகும் பவுலர் யார்? என்பது குறித்த பல்வேறு கணிப்புகளை முன்னாள் வீரர்கள் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், இந்திய அணி சார்பாக இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடிக்கப்போகும் பேட்ஸ்மேன்கள் யார்? என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அதிக ரன்களை குவிக்கும் வீரராக சூர்யகுமார் யாதவ் திகழ்வார் என சுரேஷ் ரெய்னா தனது கணிப்பினை வெளிப்படுத்தி உள்ளார்.







