ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி : இந்திய மகளிர் அணி அறிவிப்பு


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி : இந்திய மகளிர்  அணி அறிவிப்பு
x

பெர்த்தில் மார்ச் 6-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடக்கிறது.

புதுடெல்லி,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பிப்ரவரி 15-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் மார்ச் 6-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி:

ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிர்தி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், அமன்ஜோத் கவுர், ரிச்சா கோஷ், உமா சேத்ரி, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், சினே ராணா, கிராந்தி கவுட், வைஷ்ணவி ஷர்மா, சயாலி சத்ஹாரே.

1 More update

Next Story