இந்திய ஏ அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய ஏ அணி அறிவிப்பு


இந்திய ஏ அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய ஏ அணி அறிவிப்பு
x

image courtesy:ICC

இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 16-ம் தேதி தொடங்க உள்ளது.

சிட்னி,

ஆஸ்திரேலிய ஏ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா ஏ அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.

அதன்படி முதல் போட்டி செப்டம்பர் 16-ம் தேதியும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் 23-ம் தேதியும் தொடங்க உள்ளனர். 2 போட்டிகளும் லக்னோவில் நடைபெறுகின்றன.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஆரோன் ஹார்டி, சாம் கான்ஸ்டாஸ், நாதன் மெக்ஸ்வீனி போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய ஏ அணி விவரம்: சேவியர் பார்ட்லெட், கூப்பர் கோனொலி, ஜாக் எட்வர்ட்ஸ், ஆரோன் ஹார்டி, கேம்பல் கெல்லவே, சாம் கான்ஸ்டாஸ், நாதன் மெக்ஸ்வீனி, லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, பெர்கஸ் ஓ'நீல், ஆலிவர் பீக், ஜோஷ் பிலிப், கோரி ரோச்சிசியோலி, லியாம் ஸ்காட்.

1 More update

Next Story