கோடிக்கணக்கில் இழப்பை சந்தித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்...காரணம் என்ன ?

ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது
மெல்போர்ன்,
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது ஆஷஸ் டெஸ்ட் மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 110 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து 42 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்தது. இதனால், ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது.இரண்டே நாளில் போட்டி முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இரண்டே நாளில் இந்த போட்டி முடிவுக்கு வந்ததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் ரூ.60.59கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பெர்த்தில் நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியும் 2 நாளில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.






