மூன்று அணிகள்... மூன்று இறுதிப்போட்டிகள்.... வரலாறு படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்


மூன்று அணிகள்... மூன்று இறுதிப்போட்டிகள்.... வரலாறு படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்
x

Image Courtesy: @IPL

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

அகமதாபாத்,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 2வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஹர்திக் தலைமையிலான மும்பை மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 203 ரன்கள் எடுத்தது.

மும்பை தரப்பில் அதிகபட்சமாக திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் தலா 44 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து 204 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த பஞ்சாப் அணி 19 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் இறுதிஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில், பஞ்சாப் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றதன் மூலம் ஸ்ரேயாஸ் ஐயர் வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார். அதாவது, ஐ.பி.எல். வரலாற்றும் மூன்று வெவ்வேறு அணிகளை இறுதிப்போட்டிக்குள் அழைத்து சென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு டெல்லி அணியையும், 2025ம் ஆண்டு கொல்கத்தா அணியையும், நடப்பு சீசனில் பஞ்சாப் அணியையும் ஸ்ரேயாஸ் ஐயர் இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். வேறு எந்த வீரரும் ஒன்றுக்கு மேற்பட்ட அணிகளுக்கு இதைச் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story