துஷார் ரஹேஜா அதிரடி பேட்டிங்.. திருச்சி அணியை வீழ்த்தி திருப்பூர் வெற்றி

image courtesy:twitter/@TNPremierLeague
திருப்பூர் தரப்பில் அதிகபட்சமாக துஷார் ரஹேஜா 80 ரன்கள் குவித்தார்.
சேலம்,
9-வது டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் - ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் அடித்துள்ளது. திருப்பூர் தரப்பில் அதிகபட்சமாக மோகன் பிரசாத் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய திருப்பூர் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன அமித் சாத்விக் 5 ரன்களிலும், டேரில் பெராரியோ ஒரு ரன்னிலும் நடையை கட்டினர்.
இருப்பினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன துஷார் ரஹேஜா அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தார். வெறும் 36 பந்துகளில் 80 ரன்கள் குவித்த நிலையில் துஷார் ரஹேஜா ஆட்டமிழந்தார்.
இறுதி கட்டத்தில் பிரதோஷ் ரஞ்சன் பால் 42 ரன்களும், முகமது அலி 25 ரன்களும் அடித்து அணிக்கு வெற்றியை உறுதி செய்தனர். வெறும் 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த திருப்பூர் 165 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.






