யு19 உலகக்கோப்பை: இந்தியாவுக்கு எதிராக வங்காளதேசம் பந்துவீச்சு தேர்வு


யு19 உலகக்கோப்பை: இந்தியாவுக்கு எதிராக வங்காளதேசம் பந்துவீச்சு தேர்வு
x

டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் ஹக்கீம் தமீம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஜார்ஜியா,

16 அணிகள் பங்கேற்கும் 19 வயதுக்குட்பட்டவருக்கான (யு19) ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது .பிப்ரவரி 7-ந் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் 4 பிரிவில் இருந்தும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும். இந்த சுற்றில் விளையாடும் 6 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இதன் முடிவில் 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில், டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் ஹக்கீம் தமீம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

1 More update

Next Story