விஜய் ஹசாரே கோப்பை: கோலி,பண்ட் அதிரடி ...டெல்லி அபார வெற்றி


விஜய் ஹசாரே கோப்பை: கோலி,பண்ட் அதிரடி ...டெல்லி அபார வெற்றி
x

இந்த போட்டியில் விராட் கோலி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

மும்பை,

33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது.

இதில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் டெல்லி - குஜராத் அணிகள் மோதின. இதில் டெல்லி அணிக்காக இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, பண்ட் விளையாடினர்.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சிந்தன் காஜா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடி விராட் கோலி, பண்ட் அரைசதமடித்தனர். விராட் கோலி 77 ரன்களும், பண்ட் 70 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து விளையாடிய குஜராத் அணி 47.4 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

1 More update

Next Story