விஜய் ஹசாரே கோப்பை: இரட்டை சதமடித்த இளம் வீரர்

டாஸ் வென்ற பெங்கால் அணியின் கேப்டன் அபிமன்யு ந்துவீச்சை தேர்வு செய்தார்.
மும்பை,
33வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் மோதி வருகின்றன.இதில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஐதராபாத் - பெங்கால் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்கால் அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணியில் தொடக்க வீரர் அமன் ராவ் அதிரடியாக விளையாடினார். பந்துகளை, பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்ட அவர் இரட்டை சதமடித்து (12 பவுண்டரி, 13 சிக்ஸர்) அசத்தினார்.
இதனால் 50 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 353 ரன்கள் இலக்குடன் பெங்கால் அணி விளையாடி வருகிறது.






