சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி


சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி
x

ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

ராஜ்கோட்,

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் வதோதராவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி பேட்டிங் செய்தது.50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்தது. கேஎல் ராகுல் 112 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து அணி 47.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. டேரில் மிட்செல் சதம் விளாசி அசத்தினார். டேரில் மிட்செல் 131 ரன்கள்(11 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) குவித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா-நியூசிலாந்து தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சச்சின் தெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்தார்.

நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய விராட் கோலி முதல் பந்தில் பவுண்டரி அடித்து 1, 750 ரன்கள் சாதனையைக் கடந்தார். நேற்றைய போட்டியில் விராட் கோலி 23 ரன்கள் எடுத்தார்இவர் 1, 773 ரன்களுடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 1,971 ரன்களுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

1 More update

Next Story