தெண்டுல்கர் சாதனையை சமன் செய்த விராட் கோலி

தென்ஆப்பிரிக்கா 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது.
தெண்டுல்கர் சாதனையை சமன் செய்த விராட் கோலி
Published on

ராய்ப்பூர்,

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்த தென்ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 358 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் விராட் கோலி, ருதுராஜ் கெயிக்வாட் சதமடித்து அசத்தினர். பின்னர் 359 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 49.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 362 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது 4-வது சதத்தை எடுத்த மார்க்ரம் 110 ரன்கள் (98 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி வெற்றிக்கு உதவினார். இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த நிலையில் , இந்த போட்டியில் சதமடித்ததால் விராட் கோலி, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் சாதனையை சமன் செய்துள்ளார்.

ராய்ப்பூர் மைதானத்தில் விராட் கோலி அடித்த சதம், அவரது 53-வது சதமாகும். இதையும் சேர்த்து ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர் 34 இடங்களில் சதம் அடித்துள்ளார். இதன் மூலம் அதிக வெவ்வேறு இடங்களில் சதம் அடித்தவரான சச்சின் தெண்டுல்கரின் சாதனையை (இவரும் 34 இடத்தில் சதம்) சமன் செய்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com