நாங்கள் இறுதிப்போட்டிக்கு வரவேண்டிய அணி ஆனால்... - பேட் கம்மின்ஸ் பேட்டி


நாங்கள் இறுதிப்போட்டிக்கு வரவேண்டிய அணி ஆனால்... - பேட் கம்மின்ஸ் பேட்டி
x

Image Courtesy: @IPL

கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் கிளாசென் 105 ரன்கள் அடித்தார்.

புதுடெல்லி,

ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 278 ரன்கள் குவித்தது.

ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக கிளாசென் 105 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 279 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 168 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 110 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த போட்டியை வெற்றியுடன் முடித்ததில் மகிழ்ச்சி. கடந்த சில போட்டிகளாகவே நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறோம். அதிலும் குறிப்பாக எங்களது பேட்டிங் யூனிட்டை பார்த்தால் நிச்சயம் எதிரணிகளுக்கு பயம் வரும்.

அந்த அளவிற்கு எங்களது வீரர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர். எங்களிடம் உள்ள வீரர்களுடன், நாங்கள் இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு வரவேண்டிய ஒரு அணி. ஆனால், இந்த ஆண்டு எங்களால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனது உண்மையிலேயே வருத்தம் தான். நாங்கள் இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே இதுபோன்று பெரிய ரன் குவிப்பை வழங்கவே முயற்சித்தோம்.

ஆனால் ஒரு சில மைதானங்களில் எங்களால் பெரிய ரன்களை அடிக்க முடியாமல் போனது. இந்த தொடரில் தற்போது நாங்கள் சரியான அணியை தேர்வு செய்துள்ளதாக நினைக்கிறோம். நிச்சயம் அடுத்த சீசனில் மிக வலுவாக திரும்புவோம். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story