மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை: நாளை முதற்கட்ட பயிற்சியை தொடங்கும் இந்திய அணி


மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை: நாளை முதற்கட்ட பயிற்சியை தொடங்கும் இந்திய அணி
x

Image Courtesy: @BCCIWomen

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது.

விசாகப்பட்டினம்,

13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அடுத்த மாதம் 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் களம் காணுகின்றன.

இவை தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். தொடக்க ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில், இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய மகளிர் அணியின் முதல் கட்ட பயிற்சி முகாம் விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது.

1 More update

Next Story