மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: விதிமுறைகளை மீறிய பாகிஸ்தான் வீராங்கனை - ஐ.சி.சி. எச்சரிக்கை


மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: விதிமுறைகளை மீறிய பாகிஸ்தான் வீராங்கனை - ஐ.சி.சி. எச்சரிக்கை
x

Image Courtesy: @ICC

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது.

துபாய்,

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கொழும்பில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, இந்தியாவிடம் தோல்வி கண்டது.

இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சித்ரா அமின் 81 ரன் எடுத்தார். அவர் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பும் போது, ஆடுகளத்தில் பேட்டை ஓங்கி அடித்து தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போட்டி நடுவர், வீராங்கனைகளின் நடத்தை விதியை மீறிய சித்ரா அமினுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், ஒரு தகுதி இழப்பு புள்ளியை தண்டனையாக விதித்தார்.

1 More update

Next Story