ஐதராபாத் வந்த கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸிக்கு அமோக வரவேற்பு


ஐதராபாத் வந்த  கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸிக்கு அமோக வரவேற்பு
x

கொல்கத்தா பயணம் முடிந்ததும், மெஸ்சி இன்று இரவு ஐதராபாத் வந்தடைந்தார்

ஐதராபாத்,

அர்ஜென்டினா அணியின் கேப்டனான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். 3 நாள் சுற்றுப்பயணத்தின்படி, இந்தியாவின் கொல்கத்தா நகருக்கு இன்று அதிகாலை வருகை தந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர்.

கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் மெஸ்சியின் உருவச்சிலை நிறுவப்பட்டது. கையில் உலக கோப்பையை பிடித்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை மெஸ்சி காணொலி மூலம் திறந்து வைத்து உள்ளார். அப்போது இந்தியா மற்றும் அர்ஜென்டினாவின் கொடிகளை ரசிகர்கள் உயர பிடித்தபடி இருந்தனர்.

மெஸ்சியின் வருகையையொட்டி அங்குள்ள 78 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மெஸ்ஸி இன்று பங்கேற்றார்.

கொல்கத்தா பயணம் முடிந்ததும், மெஸ்சி இன்று இரவு ஐதராபாத் வந்தடைந்தார்.ஐதராபாத் வந்த மெஸ்ஸிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்திற்கு வந்த மெஸ்ஸியை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் 'மெஸ்ஸி மெஸ்ஸி' என ஆரவாரமாக கோஷம் எழுப்பி வரவேற்றனர். மைதானத்தை சுற்றி வந்து ரசிகர்களை பார்த்து மெஸ்ஸி கையசைத்தார்.

1 More update

Next Story