ஐ.எஸ்.எல். கால்பந்து: பஞ்சாப் எப்.சி. அணியை வீழ்த்தி மோகன் பகான் வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: பஞ்சாப் எப்.சி. அணியை வீழ்த்தி மோகன் பகான் வெற்றி
x

image courtesy: Indian Super League twitter

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் - பஞ்சாப் எப்.சி. அணிகள் மோதின.

புதுடெல்லி,

11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் நேற்றிரவு நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட் அணி, பஞ்சாப் எப்.சி. அணியுடன் மோதியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி சார்பில் ரிக்கி ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். மோகன் பகான் அணி சார்பில் அல்பெர்டோ இரண்டு கோல்களும், ஜேமி மெக்லரன் ஒரு கோலும் அடித்தனர். இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் மோகன் பகான் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் எப்.சி.யை வீழ்த்தி 9-வது வெற்றியை பதிவு செய்தது.

1 More update

Next Story