ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இன்று தொடங்குகிறது

இதையொட்டி முன்னணி வீரர், வீராங்கனைகள் அங்கு முகாமிட்டு தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
மெல்போர்ன்,
ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன்படி ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி பிப்ரவரி 1-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி முன்னணி வீரர், வீராங்கனைகள் அங்கு முகாமிட்டு தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ. 672 கோடியாகும். இது கடந்த ஆண்டை விட 16 சதவீதம் அதிகமாகும்.
Related Tags :
Next Story






